• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரும்பு சக்கையில் இருந்து விநாயகர் சிலை தயாரிப்பு – கல்லூரி மாணவர்கள் புதிய முயற்சி

September 6, 2018 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற செப் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழிபாட்டிற்காக,கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மணாவர்கள் தமது ஆராய்ச்சியின் மூலமாக கரும்பு சக்கையில் இருந்து விநாயகரை முதல் முறையாக உருவாக்கி உள்ளனர்.

இந்த சிலையானது செம்பு,உலோக அச்சு வடிவத்தை கொண்டு பகாஷுடன் ஸ்டார்ச் கலந்து தயாரிக்கப்படுகிறது.இந்த சிலையை தண்ணீரில் விடும் பொழுது முழுமையாக கரைந்து,தண்ணீரில் உள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது.இதனால் செயற்கையான மூலப் பொருட்கள் மூலமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் மூலமாக ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியின் இயற்கை இழை ஆராய்ச்சி மையத்தினர் இந்த விநாயகரை தயாரித்துள்ளனர்.இந்த ஆராய்ச்சி முயற்சியில் 30 மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டு பகாஷ் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.இந்த சிலையானது குறைந்த விலையில் விரைவில் கிராமம் மற்றும் நகர்புற மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர்.மேலும்,500 க்கும் மேற்பட்ட சிலைகளை மாணவர்கள் தயாரித்து விற்பனைக்காக கொண்டு செல்லவுள்ளனர்.

மேலும் படிக்க