• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது!

August 20, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 16ம் தேதி காலமானார்.

பின்னர்,வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில் இறுதிசடங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதையடுத்து,இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார்.

இந்நிலையில் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அதன்படி வாஜ்பாயின் அஸ்தி சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது.

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி,மதுரையில் வைகை ஆறு,ஈரோட்டில் பவானி ஆறு,திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு என ஆறு இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க