• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் நாளை டெல்லி பயணம்

August 16, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நாளை காலை டெல்லி செல்கின்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை காலை டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க