• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் உண்மையான ராஜதந்திரியை இழந்து விட்டோம் – குடியரசுத் தலைவர்

August 16, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் உண்மையான ராஜதந்திரியை இழந்து விட்டோம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில்,அவரது மறைவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மறைவு குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இந்தியாவின் உண்மையான ராஜதந்திரியை இழந்து விட்டோம்.தொலைநோக்கு பார்வை,அனுபவம் ஆகியவை வாஜ்பாயின் வெற்றிக்கு வழிவகுத்தது அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க