September 20, 2018
தண்டோரா குழு
முத்தலாக் அவசர சட்டம் என்பது அவசரக்கோலத்தில் நிறைவேற்றப்பட்டது போல் உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முத்தலாக் அவசர சட்டம் என்பது அவசரக்கோலத்தில் நிறைவேற்றப்பட்டது போல் உள்ளது.அரசியல் சாசன சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது எனவும்,முஸ்ஸீல் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டமாக இது அமையாது.தலாக் என்பது குறித்த வரையறை குழப்பமாக உள்ளது.இதை எதிர்த்து முஸ்ஸீல் அமைப்புகளுடனும், ஜனநாயக அமைப்புகளுடனும் சேர்ந்து களமாட இருக்கிறோம்.
சமீபத்தில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவையில் 7 பேரை கைது செய்தது அநீதி ஆகும்.இதுவரை கைது செய்தவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை காவல்துறையினரால் அறிவிக்க முடியவில்லை.
நீதிமன்றத்தையும்,காவல்துறையையும் மிகக்கடுமையாக விமர்சித்த ஹச்.ராஜா மீது தான் யு.ஏ.பி.எ சட்டத்தை அமல்படுத்தியுருக்க வேண்டும்.தமிழக அமைச்சர்கள் ஊழலில் மூழ்கி திளைக்கிறார்கள்.நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும் என்றால் இவர்கள் பதவி விலக வேண்டும்.ம.ம.க சார்பாக அக்.7 தேதி திருச்சியில் அரசமைப்பு பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம்”.இவ்வாறு பேசினார்.