• Download mobile app
30 Apr 2026, ThursdayEdition - 3732
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும்

November 1, 2016 தண்டோரா குழு

திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம், அந்த அணியின் தலைவர் இள.புகழேந்தி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கட்கிழமை(அக்.31) நடந்தது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆர்எஸ்எஸ் உணர்வாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் நகல், மறைமுக குலக்கல்வி திட்டம் போல உள்ளது. இதை திமுக மாணவரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகு போராட்டங்களும் நடத்தப்படும்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பராமரிக்காமல் உள்ள தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் திமுக மாணவரணி மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மேலும் படிக்க