• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சதுர்த்தி – தமிழக முதலமைச்சர் வாழ்த்து

September 12, 2018 தண்டோரா குழு

விநாயகர் அருளால் மக்கள் அனைத்து நலன்களையும்,வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில்,களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து,அருகம்புல்,எருக்கம் பூ,செம்பரத்திப் பூ,வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து,விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை,சுண்டல்,பொரி,அவல்,கரும்பு,பழங்கள் போன்றவற்றை படையலிட்டு,மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும்,வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”. இவ்வாறு கூறியுள்ளார்

மேலும் படிக்க