• Download mobile app
06 Oct 2026, TuesdayEdition - 3891
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ‘ஃபெஸ்டிவ் பொனான்ஸா’: ஷாப்பிங், பயணம் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டுகளுக்கு அட்டகாசமான சலுகைகள்

October 6, 2026 தண்டோரா குழு

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ‘ஃபெஸ்டிவ் பொனான்ஸா’: முன்னணி ஆன்லைன் ஷாப்பிங், மொபைல் ஃபோன்கள், எலக்ட்ரானிக்ஸ், பயணம், ஃபர்னிச்சர் மற்றும் ஹோம் டெக்கார், ஃபேஷன், க்விக் காமர்ஸ் போன்ற பல்வேறு துறைகளின் முன்னணி பிராண்டுகளுக்கு ஈர்க்கக்கூடிய சலுகைகள் வருகை! ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டுகள், இணைய வங்கிச் சேவை கார்டு இல்லாத இஎம்ஐ மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ முறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிறப்பான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகளைப் பெறலாம்.

அக்டோபர் 8 அன்று தொடங்கவுள்ள ஃபிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனைக்காக வங்கியானது ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் பல்வேறு தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் 10% தள்ளுபடியைப் பெற முடியும்.புதிய ஐபோன் டியோ^, ஐபோன் 18 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு ரூ. 7,000 வரையிலும், பிற ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ரூ.15,000 வரையிலும் வங்கி உடனடி கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது.

மேலும், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐபோன் பார் லைப் திட்டத்தை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்களை மாதத்திற்கு ரூ. 2,497 முதல் தொடங்கும் 24 மாத வட்டி இல்லா தவணை முறையில் வாங்க முடியும். அதோடு, அடுத்த ஐபோனுக்கு அப்கிரேட் செய்யும்போது தற்போதுள்ள ஐபோனுக்கு உத்தரவாதமான பைபேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

கூடுதலாக கூகுள் பிக்சல், எல்.ஜி,சோனி, சாம்சங்,ஹையர்,ஹெச்பி, டெல், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், ஏர் இந்தியா,மேக்மைடிரிப், கோய்பிபோ, யாத்ரா,ஏஜியோ, டாடா கிளிக், பிளிங்கிட், அர்பன் லேடர் மற்றும் பெப்பர்ஃபிரை போன்ற பிற முன்னணி பிராண்டுகளுடனும் வங்கி கூட்டு சேர்ந்துள்ளது. இந்தச் சலுகைகள் குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த ஆண்டின் ‘ஃபெஸ்டிவ் பொனான்ஸா’ மூலம், முன்னணி பிராண்டுகளுடன் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் பலனளிக்கும் வகையிலும், எளிதாகவும், நினைவுகூரத்தக்கதாகவும் மாற்றும் வகையிலான பல அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறோம்.

ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டு இஎம்ஐ மற்றும் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இச்சலுகைகளைப் பெறலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க