• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்ந்தது முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் !

November 30, 2018 தண்டோரா குழு

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள்,பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை,உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்ற முதல்வர் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்திரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த புதிய முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது என்றும்,இதன் மூலம் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால்,இதுவரை 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.இதற்காக 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க