September 11, 2018
தண்டோரா குழு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்,பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 41பேர் உயிர் இழந்துள்ளனர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கொண்டகட்டு என்ற இடத்திலிருந்து ஜகிதல் என்ற கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.பேருந்து சஜிவரபேட்டை கிராமம் அருகே வந்தது போது குறுகலான பாதையில் சென்றால் சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளது.இந்த விபத்தில் 25 பெண்கள்,8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.