September 3, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 5,77,186 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் பட்டியலில் இறந்தவர்கள்,இடம் மாறியவர்கள்,இருமுறை பதிவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது.அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலிலிருந்து அக்.31 வரை 5,77,186 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதில் உயிரிழந்ததால் 1,84,439 பேரும்,இடம் பெயர்ந்ததால் 3,17,189 பேரும்,2 முறை இடம் பெற்றதால் 75,558 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது.