• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவு பெய்யும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

October 1, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் இந்த வருட வடகிழக்கு பருவமழை,சராசரி மழையளவை விட கூடுதல் மழையளவு கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதால்,விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், இந்த வருட வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையே அதிகளவில் எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 15% குறைவான அளவே பெய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகளவு இருக்கும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்து உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 924 மில்லி மீட்டர் மழையளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக சென்னை,கடலூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குறைந்தபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 281மில்லி மீட்டர் மழையளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடலோர பகுதி மாவட்டங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.

சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும்,குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்று மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும் என்பதால்,பண்ணைகுட்டைகள் மூலமாக தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மானாவாரி சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் வரை மழைப்பொழிவு இருக்கும் என்பதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

மேலும் படிக்க