September 20, 2018
தண்டோரா குழு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் நேற்று ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது.இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை,கடலூர் நாகை,புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட ஆறு துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மேலும் ஆந்திரா அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என்பதால் ஆந்திரா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.