September 19, 2018
தண்டோரா குழு
வடதமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் 19, 20 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஆந்திரா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே சென்னையில் ராயப்பேட்டை,மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி,புழல்,கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.இதேபோல் புதுச்சேரியில் தவளக்குப்பம்,திருக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்தது.