• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு !

November 16, 2018 தண்டோரா குழு

கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 26பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 83,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மரங்கள் முறிந்து விழுந்தும்,வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும்,மின்னல் தாக்கியும் தமிழகத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்,சதீஷ், அய்யாதுரை,தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.மேலும் பிரியாமணியின் தந்தை துளசி,தாய் லட்சுமி,சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முத்துமுருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பலத்த சூறைக்காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.பேரூராட்சி சுய உதவிக் குழு பணியாளராக பணிபுரிந்து வந்த எலிசபெத் சாலையில் நடந்து சென்ற போது மரம் விழுந்தது.

திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்ததில் குடவாசல் பகுதியில் ராமகிருஷ்ணன்,கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை திராவிட மணி உயிரிழந்தார்.

கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.காரில் சிக்கிய ஒரு ஆணும்,குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆலங்குடியில் ரெங்கசாமி மற்றும் புதுக்கோட்டையில் மேகலா என்ற 6 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.அன்னவாசலில் சீதாயி (63),விராலிமலையில் ஈஸ்வரி (24),ரெத்தினக்கோட்டையில் பொன்னம்மாள் (50) ஆகியோரும் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வீடுகள் இடிந்து பெண் உட்பட 3பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,மணப்பாறை அடுத்த மரவபட்டியில் ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் சின்னம்மாள்(70) என்பவர் பலியானார்.

மேலும் படிக்க