• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என காட்டிய ஆர்வத்தை ஸ்டெர்லைட் வழக்கில் காட்டவில்லை– கனிமொழி

August 10, 2018 தண்டோரா குழு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என காட்டிய ஆர்வத்தை தமிழக அரசு ஸ்டெர்லைட் வழக்கில் காட்டவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்

இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில்,

“வேதாந்தா நிறுவனம்,அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மே22 அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு,தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில்,மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில்,முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால்,இதற்கான ஆலோசனை வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில்,அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது.ஏன் தாமதம் என்றால்,சி.எஸ்.வைத்தியநாதன் தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று,சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால்,இத்தோல்வி நிகழ்ந்திருக்காது.எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்”.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க