• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“சுயத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் மரணமே! உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆர்.ஜே. பாலாஜி டுவீட்

September 6, 2018 தண்டோரா குழு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்ற பல ஆண்டுகளாக பெரிதும் எதிப்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும்,இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தும்உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதைத்தொடர்ந்து மும்பை,டெல்லி,சென்னை,பெங்களூரு உள்பட நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல் இந்த தீர்ப்பை வரவேற்று இந்தியா முழுவதும் உள்ள திரைப்பலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“சுயத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் மரணமே!மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் மிகவும் அவசியமான வார்த்தைகள் வந்துள்ளன.நம்பிக்கையை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.இந்த தீர்ப்பு ஒரு வரலாறு” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க