• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விசாகனை மறுமணம் செய்கிறாரா செளந்தர்யா ரஜினிகாந்த் ?

November 13, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா.இவர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி இருந்தார்.இவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இதற்கிடையே,செளந்தர்யா – அஷ்வின் தம்பதிக்கு வேத் என்ற மகன் பிறந்தவுடன்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர். இவ்விவாகரத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கிய செளந்தர்யா,தொடர்ந்து படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.

இதற்கிடையில், தொழிலதிபர் ஒருவரது மகனை காதலித்து வருவதாகாவும் அவரை இரண்டாவதாக திருமணம் செய்யஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன்.இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார்.மிகப்பெரிய கோடீஸ்வரரான விசாகன்,ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்ளும் விசாகன்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் பத்திரிகை நிரூபர் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க