• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது – ஸ்டாலின் ட்வீட்

September 7, 2018 தண்டோரா குழு

மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி.இவருடைய மகள் சோபியா (வயது 28).இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும்,சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அப்போது,சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால்,சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன்,இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும்.”பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில்,காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி “சம்மன் அனுப்பி” மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க