• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் ராஜினாமா

October 17, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் #Metooஎன்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை யமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது மீடூ மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

பத்திரிகையில் பணியாற்றிய போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தம்மிடம் தவறாக நடந்ததாக மத்திய அமைச்சர் அகபர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீ டூ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர்.

இதனையடுத்து,டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமைச்சர் அக்பர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், முதன் முதலாக தன் மீது அவதூறு பரப்பிய பிரியரமணி உள்ளிட்ட சிலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து ‘
உள்ளார். இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாகவும்,நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க