• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை நிலானி தற்கொலை முயற்சி…!

September 20, 2018 தண்டோரா குழு

சின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, காவலர் உடையில் இருந்தவாறு கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்டு,பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில்,திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு செய்வதாக நடிகை நிலானி புகார் அளித்த நிலையில்,அவரது நண்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து,இவரது தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என்று செய்திகள் பரவின.இதனால் நண்பர் காந்தி தற்கொலைக்கு தாம் காரணம் இல்லை என நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.காந்தி மரணத்திற்கு தாம் காரணம் என தேவையின்றி வதந்தி பரப்புவதாகவும் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில்,சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மேலும் படிக்க