• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெரீனாவில் 144 தடையுத்தரவு நீக்கம்

February 4, 2017 தண்டோரா குழு

சென்னை மெரினா கடற்கரையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்குத் தடை விதிக்க வலியுறுத்தியும் மாணவர்களும் பொதுமக்களும் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை 23-ஆம் தேதி காலையில் போலீசார் கலைத்தனர். அதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு பிப்ரவரி 12-ஆம் தேதி வரை 144 தடையுத்தரவுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்தார்.

தற்போது தடையுத்தரவுக் காலம் முடிவதற்கு முன்பாகவே 144 தடையுத்தரவை சென்னை மாநகர காவல் துறை அதை விலக்கிக் கொண்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெரினா கடற்கரையில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு வாபஸ் பெறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 41வது பிரிவின்படி அனுமதியின்றி மக்கள் கூடுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அறிக்கையில் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க