October 1, 2018
தண்டோரா குழு
ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000ல் இருந்து ரூ.20,000 ஆக குறைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ஏ.டி.எம்களில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாக பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது.மேலும்,சமீப காலமாக ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதில் மோசடி அதிகரித்து உள்ளதாகவும்,இது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வருவதாலும்,இதனை கட்டுபடுத்தும் விதமாகவும்,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,இந்த முடிவை எடுப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.இந்த நடைமுறை வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.