• Download mobile app
20 Feb 2019, WednesdayEdition - 1106
FLASH NEWS
  • இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
  • தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு சாதகம் – திருமாவளவன்
  • “குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” – ஆணையர் விஸ்வநாதன்
  • “உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுக முடிவு அறிவிப்பு – ஓபிஎஸ்
  • உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
  • வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன…
  • இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!
  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு பாரிவேந்தர் இரங்கல்

ஐயப்பனை தரிக்காமல் போகமாட்டேன் திருப்தி தேசாய்!

November 16, 2018 தண்டோரா குழு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்த திருப்தி தேசாய்,கொச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாதபடி ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர்.அப்போது இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா? ஏற்காதா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்ற உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதோடு,சீராய்வு மனுக்களை விசாரித்தாலும், முந்தைய உத்தரவுக்கு தடையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும்,மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் வழக்கறிஞர்கள் வாதத்துடன் நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையில் நீதிமன்ற அறையில் நடைப்பெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

இதற்கிடையில்,வரும் நவம்பர் 16ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள்,அது தொடர்பான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கேரளா அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,காங்கிரஸ் பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டன.இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ்,பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இதையடுத்து இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.கூட்டத்திற்குப் பின்னர்,உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப் பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மராட்டியத்தை சேர்ந்த திருப்தி தேசாய்,என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு கண்டிப்பாக போவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.இது குறித்து அவர் சபரிமலைக்கு நாங்கள் வரும் அன்றைய தினம் கேரள அரசு எங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தாங்கள் ஐயப்பனை தரிசனம் செய்யப்போகிறோம் தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.மேலும்,இதே போல பாதுகாப்பு கேட்டு கடிதம் ஒன்றை பிரதமருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவத்திருந்தார்.

இந்நிலையில் திருப்தி தேசாய் மற்றும் அவருடன் சில பெண் ஆர்வலர்களும் இன்று அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர்.அவர்களை வெளியே வரவிடாமல்,பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொச்சி விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தினால் அவரால் விமான நிலையத்திலிருந்து வெளிய வரமுடியவில்லை.இதனை தொடர்து அங்கிருத்து செல்லுமாறு போலீசார் அவரை கேட்டுகொண்டனர் ஆனால் அவர் அயப்பனை தரிசனம் செய்யாமல் அங்கிருத்து போவதில்லை என கூறிவிட்டார்.

மேலும் படிக்க