• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை விவகாரம் அனைத்து கட்சி கூட்டம் தோல்வி– கேரள அரசு பிடிவாதம்

November 15, 2018 தண்டோரா குழு

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர்.அப்போது இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா? ஏற்காதா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்ற உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதோடு,சீராய்வு மனுக்களை விசாரித்தாலும்,முந்தைய உத்தரவுக்கு தடையில்லை.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.மேலும்,மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் வழக்கறிஞர்கள் வாதத்துடன் நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையில் நீதிமன்ற அறையில் நடைப்பெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

இதற்கிடையில்,வரும் நவம்பர் 16ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள்,அது தொடர்பான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கேரளா அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,காங்கிரஸ் பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டன.இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ்,பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இதையடுத்து இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.கூட்டத்திற்குப் பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு உறுதியாக உள்ளது.

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கமாகும்.தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது.பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது.நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க