• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?

December 1, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரன்,மருதுகனேஷ், மதுசூதனன் ஆகியோர் தங்கள் சொத்து மதிப்பு விவரங்களை இன்று தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, தினகரன் அணி என மும்முனை போட்டி நிலவியுள்ளது. இதையொட்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், இன்று இவர்கள் அனைவரும்வேட்பு மனுக்களைதாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்யப்பட்ட போது அளிக்கப்பட்ட சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுசூதனன் – அதிமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும்,அதிமுக வேட்பாளர் மதுசூதனன் சொத்து மதிப்பு – ரூ.1,49,53,941.
அசையும் சொத்துக்களின் மதிப்பு – ரூ.12,53,941.
அசையா சொத்துக்களின் மதிப்பு – ரூ.1,37,00,000.

மருது கணேஷ் – திமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மருதுகணேஷின் சொத்து மதிப்பு – ரூ. 12,57,845
அசையும் சொத்துக்களின் மதிப்பு – ரூ. 2,57,845.
அசையா சொத்துக்களின் மதிப்பு – ரூ.10,00,000.

தினகரன் – சசிகலா அணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.74,17,807.
அசையும் சொத்து -ரூ.16,73,799.
அசையா சொத்து – ரூ.57,44,008.

மேலும் படிக்க