• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது

October 1, 2016 தண்டோரா குழு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதை ஏற்க மறுத்த அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனியார் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தாவை 5 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழுவில் நியமித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே. குப்தா, வினோத் உள்பட 5 பேர் பரிசோதனை செய்கின்றனர். மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம், வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் உள்ளனர். மேலும் நீதிபதி தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

மேலும் படிக்க