• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிந்து முஸ்லீம் இணைந்து கொண்டாடப்போகும் ரக்ஷா பந்தன்

August 5, 2016 தண்டோரா குழு

சகோதரிகள் தங்களை ரக்ஷிக்கும் பொறுப்பை தங்கள் பந்துக்களான சகோதரர்களிடம் ஒப்படைப்பதே ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியின் தாத்பர்யம்.ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பு சர்வதேச ரக்ஷா பந்தன் தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

ராக்கி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ரக்ஷாபந்தன் பல தரப்பட்ட கலாச்சாரத்தின் கலவையோடு நாட்டின் பல மதங்களின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

ராக்கியன்று கட்டப்படும் கயிறு நம்பிக்கைக்கு அஸ்திவாரம் என்பதைப் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.மறைந்த சித்தூர் ராஜாவின் மனைவி ராணி கர்னாவதி, குஜராத்தின் சுல்தான் பஹதூர் ஷாவின் படையெடுப்பிலிருந்து சித்தூரைக் காக்க முகலாய சக்கிரவர்த்தியான ஹுமாயூனுக்கு ராக்கி அனுப்பினார்களாம்.

அவரும் அதை மதித்துத் தனது படைகளைச் சித்தூரைக் காப்பாற்ற அனுப்பினாராம். இது பரஸ்பரம் நம்பிக்கைக்கு மட்டுமின்றி இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற பாகுபாடின்றி அனைவராலும் மதிக்கப்படும் ஒன்று என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.

மற்றொரு சமயத்தில் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும், கைகேய நாட்டு அரசன் போரஸ்க்கும் 326ம் ஆண்டு சண்டை நடந்த போது அலெக்ஸாண்டரின் மனைவி ரொக்ஷனா, அரசன் போரஸ்க்கு ராக்கி பவித்திர நூலை அனுப்பியுள்ளார். தனது கணவனுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்று வேண்டியுள்ளார்.

சண்டையின் முடிவில் தனது வாளால் அலெக்ஸாண்டரின் தலையைத் துண்டிக்க ஓங்கிய கையில் ராக்கியைக் கண்டு போரஸ் மனதை மாற்றிக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இந்தச் சடங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தது என்று கூறும் பலருக்கு இவ்வரலாறு அவர்களின் தவற்றை உணர்த்த வல்லது. மதங்களின் நல்லிணக்கத்திற்காகவே இவை போன்ற சம்பிரதாயங்கள் உருவாக்கப்பட்டன என்றால் அது மிகையாகாது.

1905ம் ஆண்டு நடைபெற்ற பெங்காலின் பிரிவின் போது அமரக்கவி ரவீந்திரநாத்தாகூர், ஹிந்து மற்றும் முஸ்லீம்களிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும் விதைக்க இவ்விழா உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.ஆகஸ்ட் 17ம் தேதி டல்கடொர ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த விழாவிற்கு 35 நாடுகளிலிருந்து அரசு தூதுவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாட்டு முஸ்லீம் பிரிதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

MRM, RSS இரு அமைப்புகளும் இணைந்து பிரச்சாரகர் இந்திரேஷ்குமார் தலைமையில் நடைபெறப்போகும் இவ்விழாவில் முஸ்லீம் இனப்பெண்கள் ஹிந்து சகோதரர்களுக்கும், ஹிந்து பெண்கள் முஸ்லீம் சகோதரர்களுக்கும் தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் பொருட்டு பவித்திரமான ராக்கி கயிற்றைக் கட்ட உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் போராளி புரான் வானியின் கொலையால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தெளிவாக்கவும் இம்மேடையைத் தளமாக உபயோகிக்க இவ்வமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான காஷ்மீர் மாநில மக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய முயற்சியால் காஷ்மீர் மற்றும், பிற இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும் என்றும், மத பாகுபாடு மறையும் என்றும் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். சச்சரவுகளும், தீவிரவாதங்களும் நிறைந்த பாகிஸ்தானுக்கும், அன்பும், சாந்தியும் நிலவும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாட்டை காஷ்மீர் மாநில மக்கள் உணரும்படிச் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று MRM தேசீய அமைப்பாளர் மொகமட் அஃப்ஸல் தெரிவித்துள்ளார்.

இந்த விழா ஹிந்துக்களின் பண்டிகை என்ற எண்ணம் ஒழித்து, இந்திய கலாசாரத்தை இணைக்கும் பாலம் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்றும் அஃப்ஸல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க