September 6, 2018
தண்டோரா குழு
கத்தார் நாட்டில் பணி புரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி தங்கள் நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.எனினும் கத்தாரில் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக தங்களது நாடுகளுக்கு செல்வதற்கு கூட பல்வேறு விசா கட்டுபாடுகள் இருந்தன.இந்நிலையில்,இந்த நடைமுறையில் கத்தார் அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி கத்தாரை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்கள்,இனி அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கத்தாரில் வசிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும்,2022ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிகள் கத்தரின் தோஹா நகரில் நடக்கவுள்ள நிலையில்,இதனை கருத்தில் கொண்டு தான் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.