October 1, 2018
தண்டோரா குழு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாக்கடையில் இறங்கி தூய்மைப்பணி மேற்கொண்டார்.புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் சொந்த தொகுதி நெல்லித்தோப்பு.இதையடுத்து,இன்று காலை சொந்த தொகுதியான நெல்லித்தோப்பில் நாராயணசாமி தூய்மை பணியை மேற்கொண்டார்.
அப்போது,நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதல்வர் நாராயணசாமி,வாய்க்காலில் இறங்கி குப்பைகளை அகற்றி தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார்.அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.