• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Prozone மாலுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

October 10, 2023 தண்டோரா குழு

சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை Prozone மால் சேதப்படுத்தியதாகவும் அதற்கான அபராதத்தினை செலுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி பொறியாளர் Prozone மாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21க்கு உட்பட்ட சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலினை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் சேதப்படுத்தி உள்ளதாகவும் இச்செயலுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்த பொழுது அதனை வாங்க மறுத்துள்ளதாகவும் எனவே சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலினை சரி செய்யவும் மாநகராட்சி மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தினை உடனடியாக செலுத்தும் படியும் தவறும் பட்சத்தில் மாலுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் வணிக வளாகத்தில் செயல்படும் கடைகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க