• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா மீது வழக்கு தொடரப்படும் – ஒ.பன்னீர்செல்வம்

January 31, 2017 தண்டோரா குழு

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

பவானி ஆற்றில் நீரை தேக்கி வைக்க, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டு குழுவிடம் கேரள அரசு மனு தாக்கல் செய்தது.

அதன்படி பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசுக்குஅனுமதி அளித்தது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இந்தவிவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது.

இதை அடுத்து ” கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது, அணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு நாட்களில் வழக்கு தொடரப்படும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க