• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி கைது !

September 24, 2018 தண்டோரா குழு

டெல்லியில் எட்டுமாத கர்ப்பிணி,தனது கணவரை முத்தமிடும் போது அவரது நாக்கை கடித்து துண்டாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங்.பெயிண்டிங் வேலை செய்து வரும்,இவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.கரண்சிங் மனைவி காஜல் எட்டு மாதா கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில்,கடந்த சனிக்கிழமை இரவு இத்தம்பதியினர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத்தனர்.பின்னர் இருவரும் சமாதானம் ஆன நிலையில் கணவரை முத்தமிட்ட காஜல், கரணின் நாக்கை துண்டாக்கும் அளவிற்கு கடித்துள்ளார்.நாக்கு பாதி துண்டான நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட கரண்சிங் அலறியுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவத்தை கண்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஜப்தர்சங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதற்கிடையில்,அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,இனி இவரால் பேச முடியுமா என்பது சந்தேகம் என்று சொல்லிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கர்ப்பிணி பெண்ணான காஜலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க