• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஜி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

November 26, 2018 தண்டோரா குழு

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.இதற்கிடையில்,இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது.பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது.இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும்,தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,தனக்கு எதிராக யாரோ சதி செய்வதாக அஞ்சுவதாக பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும்,சிபிசிஐடி போலீசாரும் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறி இருந்தார்.இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம்,நீதிமன்ற உத்தரவு இல்லாமல்,போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காமல்,ஐஜி.பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.பின்னர் விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க