September 18, 2018
தண்டோரா குழு
பாமக மாநில துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித்தை நியமித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித்.அதன் பல்வேறு படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபத்திரங்களிலும் நடித்துள்ளார்.இதற்கிடையில்,கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் இன்றி இருந்தார்.இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரு அணியாக இருந்த போது நடிகர் ரஞ்சித் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பேசி வந்தார்.
இந்நிலையில்,நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.இந்நிலையில்,பாமக மாநில துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித்தை நியமித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.