September 25, 2018
உலகில் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“உற்சாகமான லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன்.தாய்நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.பாஜக உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில்,பெருமிதம் கொள்கிறோம்.மனிதநேயத்திற்கு பெயர் போன பா.ஜ.க தீன்தயாளின் கொள்கையை ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரும் பின்பற்றுகிறோம்.ஓட்டு வங்கி அரசியல்,இந்தியாவை சீரழித்துள்ளது.இதனால்,வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.கடந்த காங்கிரஸ் ஆட்சி,ஊழல் காலமாக இருந்தது.அக்கட்சியிடமிருந்து மாநிலத்தை காக்க வேண்டும்.அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில்,பல மாநிலங்களுக்கு தடை ஏற்படுத்தியது.அக்கட்சியை தண்டிக்க உங்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.உலகில் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் ஏற்றுக் கொள்ளப்படவில்லை”.இவ்வாறு பேசினார்.