• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய நல்லாசிரியர் விருதை பெறவிருக்கும் கோவையை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு பிரதமர் மோடி பாராட்டு

September 5, 2018 தண்டோரா குழு

தேசிய நல்லாசிரியர் விருது பெறவிருக்கும் கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஸதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு,தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.இந்த விருதுகள் தேசிய ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகின்றன.இந்த வருடத்திற்கான விருதுகளை துணை ஜனாதிபதி திரு.வெங்கைய்யா நாயுடு வழங்கவிருக்கிறார்

கடந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.இந்நிலையில்,நடப்பாண்டில் ஒரே ஒரு ஆசிரியர் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.நடப்பாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,கோவையைச் சேர்ந்த ஸதி என்பவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய காரணம் ?

ஆசிரியர் ஸதி 2015ம் ஆண்டு இப்பள்ளியில் சேரும் போது 140 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர்.தற்போது 270 மாணவர்கள் உள்ளனர்.மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை இவர் எடுத்துள்ளார்.கடந்த மூன்று வருடங்களில் அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.அதன் விளைவாக மாணவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இதுமட்டுமின்றி பள்ளி கட்டடத்தை சீரமைக்க காரணமாக இருந்துள்ளார்.இதற்காக L&T நிறுவனத்திடம் பேசி நிதியை திரட்டியுள்ளார்.பள்ளி கழிப்பறை,RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்,காய்கறி தோட்டம் ஆகிவற்றை பள்ளி வளாகத்தில் அமைத்துள்ளார்.பள்ளியின் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் பலகைகளை வைத்து உள்ளார்.இதன் மூலம் மாணவர்களுக்கு படங்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.அதைபோல் யோகா,தற்காப்பு கலை,ஓவியம்,பாட்டு முதலியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

“குட்டிஸ்கமாண்டோ” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.மாணவர்கள் குழு ஒவ்வொரு நாளும் காலையில் அருகில் இருக்கும் இடத்தில் திறந்தவெளி மலம் கழித்தலை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.மாணவர்கள் குழு மாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.மேலும்,வடநாட்டிலிருந்து வந்திருக்கும் கூலி தொழிலாளிகளின் 42 குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார்.இவர்களுக்கு நல்ல தரமான கல்வியை அளிக்கிறார்.

இந்நிலையில்,தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ஸதி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.மேலும், ஆசிரியர் ஸதிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க