September 4, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள நிர்மலா கல்லூரியில் புவியியல் துறை சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்ட செய்தி தாள்களில் இருந்து, காகிதப்பைகளை தயாரித்து கல்லூரி உணவகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் இந்த காகிதப் பைகளை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காகிதப்பை தயாரிப்பு குறித்த செயல் விளக்கமுறை நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.காகிதப் பைகள் தயாரிக்கும் முறைபற்றி உயிர் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் விஜயலட்சுமி பாஸ்கரராவ் காகிதப்பை தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.இந்த துறை மாணவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காகித பைகளை தயாரித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்த வேண்டும் என கோரி ஊக்குவித்தும் வருகின்றனர்.
கோவை நகரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் வெற்றி,புவியியல் துறை முன்னாள் மற்றும் தற்போது பயிலும் மாணவியரின் முழு ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பால் சாத்தியமானதாக புவியியல் துறை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.