• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 10ல் நடக்கும் பாரத் பந்த்க்கு மதிமுக ஆதரவு

September 8, 2018 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10ல் நடக்கும் வேலை நிறுத்திற்கு மதிமுக ஆதரவு அளிக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.கடந்த 16 நாட்களில் மட்டும் பெட்ரோல்,டீசல் விலை ரூ.2.40 காசுகள் ஆகவும் உயர்த்தப்பட்டு,பெட்ரோல் விலை ரூ.84.62 காசுகள் ஆகவும், டீசல் விலை ரூ.75.48 காசுகள் ஆகவும் உச்சத்தை தொட்டு இருக்கின்றது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை பா.ஜ.க. அரசு காரணம் கூறுவதை ஏற்கவே முடியாது.ஏனெனில் 2014 மே மாதம் மோடி அரசு பொறுப்பு ஏற்ற நேரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.05 டாலர் ஆக இருந்தது.தற்போது கச்சா எண்ணெய் விலை 85 டாலர் அளவில்தான் உள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள்,டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள்.தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள்,டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

2014ல் மோடி அரசு பதவி ஏற்ற பின்னர்,பெட்ரோல்,டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு இலட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது.இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல்,டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு 34ரூ,டீசலுக்கு 25ரூ என்று உயர்த்திவிட்டது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.இந்நிலையில் தான் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10 இல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வணிகப் பெருமக்களும்,அரசு ஊழியர்கள்,தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க