• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுப்பார் –அற்புதம்மாள்

September 24, 2018 தண்டோரா குழு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“பேரறிவாளன் வழக்கு தொடர்பான 3 கோப்புக்களை இன்று ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்து வழங்கியுள்ளேன்.அதில்,வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதாக,தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் கூறிய கருத்து,படுகொலை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகம்,பேரறிவாளனின் வாக்கு மூலத்தை முழுமையாகப் பதிவிடவில்லை என CBI முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறிய வீடியோ குறுந்தகடு என பல தகவல் கோப்புகளும் இந்த கோப்புகளுடன் இணைத்துள்ளேன்.28 ஆண்டுகள் காத்திருந்து காத்திருந்து பல முறை ஏமாந்திருந்தாலும் இந்த முறை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க