October 15, 2018
தண்டோரா குழு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை வரும் நவம்பர் 15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையடுத்து,கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில்,கலைஞருக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன்,
“கலைஞரின் சிலை நவம்பர் 15ம் தேதி திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சிலை திறப்பு விழாவில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,சீதாராம் யெச்சூரி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 17ம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முன்னோட்ட விஷயங்களை ஆலோசிப்போம் என்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்.