• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 8 நபர்களிடம் மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை

October 5, 2016 தண்டோரா குழு

கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்புள்ளதா என தொடர்ந்து நான்காவது நாளாக 8 நபர்களிடம் மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த 1ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் சென்னையை சேர்ந்த ஸ்வாலிஹ் முகம்மது மற்றும் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த அபு பஷீர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கோவையை சேர்ந்த அபு பஷீரின் வீட்டில் சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிய வந்தது.இதனையடுத்து கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய மின்னனு ஆவணங்களை கைப்பற்றினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் புலானாய்வு துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என தொடர்ந்து 4 வது நாளாக இன்று 8 நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படவர்கள் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் உக்கடம் பகுதி மட்டுமின்றி கோவை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் காவல்துறையினர் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க