• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்கம்மிங் அழைப்புக்கள் நிறுத்த கூடாது :செல்போன்ஆபரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை

November 30, 2018 தண்டோரா குழு

மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என செல்போன் ஆபரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் ஜியோ வருகைக்கு பின்னர் செல்போன் சேவை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.ஜியோ நிறுவனம் புதிதாக பல ஆபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.இதனால்,பெரும் இழப்பை சந்தித்துள்ள செல்போன் சேவை நிறுவனங்கள்,வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே,இன்கம்மிங் அழைப்புகளை பெற முடியும் என அறிவித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 35 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யாத பல வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் சேவை நிறுத்தப்பட்டன.

இதற்கிடையில்,இது தொடர்பாக டிராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன.இதையடுத்து,குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால்,வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது.மேலும்,வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்பாக,குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க