• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் -கருணாஸ்

September 21, 2018 தண்டோரா குழு

நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார்.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது,தமிழக முதல்வர் குறித்தும் காவல் துறை அதிகாரி மற்றும் சாதி குறித்தும் வகையில் பேசியுள்ளார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கிடையில்,யூடியூபில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து கருணாஸ் தலைமறைவாகினார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,

“நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தவறான தகவலை பரப்புகிறார்கள்.எந்த சமுதாயம் குறித்தும் நான் இழுவாக பேசவில்லை.நான் இழிவாக பேசியதாக கூறுவது முற்றிலும் தவறு.வன்முறையை தூண்டும் வகையில் நான் என்றைக்கும் பேசியது கிடையாது.நான் பேசிய 47நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது.நான் பேசிய முழு வீடியோவை கேட்டபின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன்.’கூவத்தூர் குறித்து நான் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து கொள்கிறேன்.தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காதது ஏன்?” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க