• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீடு விவகாரம் குறித்து மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

October 23, 2018 தண்டோரா குழு

சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி,நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக்,இயக்குநர் சுசிகணேசன்,தியாகராஜன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.இந்நிலையில் மீடு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“மீடு இயக்கத்தை கவனித்து வருகிறேன்.பாதிக்கப்பட்டவர்களின் பெயரும்,குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை தந்தது.நமது திரையுலகம் சுத்தமானதாகவும்,பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய இடமாகவும் பார்க்க விரும்புகிறேன்.

நானும்,எனது குழுவும் எங்களுடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வேலை பார்க்கும் சூழலை ஏற்படுத்தி தந்துள்ளோம்.சமூகவலைதளம் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான சுதந்திரத்தை பெற்று தந்துள்ளது.அதேசமயம் இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க,இணையதள நீதி அமைப்பு ஒன்றை அமைப்பது நல்லது”.என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க