• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

November 28, 2018 தண்டோரா குழு

மேகதாது அணை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக இரு தடுப்பணைகள் கட்டி,நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு ரூ. 5912 கோடி நிதி ஒதுக்கியது.இதற்கிடையில்,மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால்,தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட சேலம்,நாமக்கல்,கரூர்,திருச்சி,தஞ்சை,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி,விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று தமிழக அரசும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த சூழலில்,கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய நீர்வளத்துறை மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில்,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க