• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

LifeTime உறுப்பினர் கட்டணம் செலுத்தியுள்ளேன்! என்னை எப்படி நீக்கமுடியும் – சின்மயி கேள்வி

November 24, 2018 தண்டோரா குழு

நான் ஆயுள்கால உறுப்பினர் கட்டணம் செலுத்திய பிறகும் என்னை எப்படி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கமுடியும் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயின் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,


நான் #metoo தொடர்பாக குரல் கொடுக்கத் தொடங்கியதால் தான் டப்பிங் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியுள்ளனர். இது போன்று யார் பேசினாலும் உடனே டப்பிங் சங்கத்தலைவர் அவர்களை நீக்கிவிடுவார். இது மாதிரியான செயல் டப்பிங் சங்கத்தில் பல முறை நடைபெற்றுள்ளது. நான் 2006ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன். நான் 11 பிப்ரவரி 2016அன்று வாழ்நாள் உறுப்பினர் ஆவதற்கான தொகையை செலுத்தி வாழ்நாள் உறுப்பினர் ஆகியுள்ளேன். ஆனால் சந்தா கட்டவில்லை என என்னை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டப்பிங் சங்கம் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க