• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி – பினராயி விஜயன்

August 11, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

கேரளாவின்இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு,மலப்புரம்,கோழிக்கோடு,கொல்லம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.

இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக சென்று இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும்,வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க