• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு

October 10, 2018 தண்டோரா குழு

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடை வழங்கியது.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது 1994ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவு பார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 1994ம் ஆண்டு,நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன்,சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இதற்கிடையில்,இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு,நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு,வழக்கு 1996ம் ஆண்டில் முடிவடைந்தது.உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ம் ஆண்டில் விடுவித்தது.மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருந்தது.

இந்நிலையில்,நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.

மேலும் படிக்க