• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் இரங்கல்

August 21, 2018 தண்டோரா குழு

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மழை வெள்ளத்தால் கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில்,கேரளத்தில் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,கேரளத்தில் வெள்ளப்பேரழிவால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,தோழமையுள்ள இந்திய மக்களுடன் துக்கத்தை ரஷ்யா பகிர்ந்து கொள்வதாகவும்,இயற்கைப் பேரிடரில் காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க